search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பத்து நாட்கள், பல்வேறு நிகழ்ச்சிகள்.. நாடு முழுக்க பம்பரமாய் சுழல தயாராகும் பிரதமர் மோடி
    X

    பத்து நாட்கள், பல்வேறு நிகழ்ச்சிகள்.. நாடு முழுக்க பம்பரமாய் சுழல தயாராகும் பிரதமர் மோடி

    • பயணத்தின் போது 29 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
    • பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அடுத்த பத்து நாட்களில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பயணத்தின் போது 29 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

    தெலுங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், அசாம், அருணாசல பிரதேசம், உத்திர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்கிறார். நாளை (மார்ச் 4) தெலுங்கானா செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


    இதைத் தொடர்ந்து அதிலாபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். அங்கிருந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி கல்பாக்கத்தில் உள்ள பாரதிய நபிக்யா வித்யூத் நிகம் லிமிடெட் செல்கிறார். இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்.

    தமிழ்நாட்டை தொடர்ந்து ஐதராபாத் புறப்படும் பிரதமர் மோடி மார்ச் 5-ம் தேதி தெலுங்கானாவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிறகு சங்காரெட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். தெலுங்கானாவில் இருந்து ஒடிசா செல்லும் பிரதமர் மோடி அங்கும் நலத்திட்டங்களை துவங்கி வைக்கிறார்.

    பிறகு ஜெய்பூரின் சண்டிகோலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேற்கு வங்காளத்தில் இருந்து ஒடிசா செல்லும் பிரதமர் மோடி மார்ச் 6-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிறகு பராசட் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    அங்கிருந்து பீகார் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்து, மார்ச் 7-ம் தேதி ஜம்மு காஷ்மீர் புறப்படுகிறார். ஸ்ரீநகரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி அன்று மாலை ஊடகத்தினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

    மார்ச் 8-ம் தேதி டெல்லி செல்லும் பிரதமர் மோடி தேசிய கிரியேட்டர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து அசாம் செல்கிறார். மார்ச் 9-ம் தேதி அருணாச்சல பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி செலா சுரங்க பாதையை திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து இடாநகரில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்கிறார்.

    அருணாச்சல பிரதேசத்தில் இருந்து அசாம் செல்லும் பிரதமர் மோடி ஜோர்ஹட்டில் லசித் பர்புகான் சிலையை திறந்து வைக்கிறார். பிறகு ஜோர்ஹட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிறகு மேற்கு வங்காளம் செல்லும் பிரதமர் மோடி சிலிகுரியில் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற இருக்கிறார்.

    மார்ச் 10-ம் தேதி உத்தர பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி அசாம்கர்-இல் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மார்ச் 11-இல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு டெல்லி புறப்படுகிறார் பிரதமர் மோடி. டெல்லியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்கிருந்து மார்ச் 12-ம் தேதி குஜராத் செல்கிறார். பிறகு அங்கிருந்து ராஜஸ்தான் செல்லும் பிரதமர் மோடி மார்ச் 13-ம் தேதி குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை கானொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

    Next Story
    ×