என் மலர்
இந்தியா
X
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற ஹாக்கி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Byமாலை மலர்6 Oct 2023 10:00 PM IST
- ஜப்பானை 5- 1 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
- இந்த வெற்றி, இவர்களின் மன உறுதிக்கு சான்றாகும்.
சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. 11வது நாளான இன்று நடைபெற்ற ஆடவருக்கான ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா- ஜப்பான் மோதியது.
இதில், ஜப்பானை 5- 1 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி அணி தங்கம் வென்றது உற்சாகமளிக்கிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
இவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவை விளையாட்டை மட்டுமல்ல, எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளன.
இந்த வெற்றி, இவர்களின் மன உறுதிக்கு சான்றாகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
Next Story
×
X