என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பொய்யும் வஞ்சகமும் படுதோல்வி அடைந்துள்ளது: மகாராஷ்டிரா வெற்றி குறித்து பிரதமர் மோடி
- காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விட பா.ஜ.க. அதிக இடங்களைப் பெற்றுள்ளது.
- எதிர்மறை அரசியலையும், வாரிசு அரசியலையும் மக்கள் தோற்கடித்துள்ளனர் என்றார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மேலும், பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ஏராளமான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவருக்கு தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது:
இன்று எதிர்மறை அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர்.
நிர்வாக திறனால் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளது. காங்கிரசின் பொய்கள், வஞ்சகத்தை மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் நிராகரித்துள்ளது. காந்தி குடும்பம் பிரிவினைவாத விஷத்தைப் பரப்புகிறது.
வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான தீர்மானத்தை மகாராஷ்டிரா உறுதிப்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மற்றும் தே.ஜ.கூட்டணி தொண்டர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உ.பி., உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பா.ஜ.க.விற்கு வலிமையான ஆதரவை கொடுத்துள்ளன.
அசாம் மக்கள் மீண்டும் ஒரு முறை பா.ஜ.க. மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.
ம.பி.யிலும் வெற்றி கிடைத்துள்ளது. பீகாரில் தே.ஜ.கூ.ட்டணிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. இது நாடு வளர்ச்சியை மட்டும் விரும்புவதை காட்டுகிறது.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்பது இது மூன்றாவது முறை. இது வரலாறு. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விட பா.ஜ.க. அதிக இடங்களைப் பெற்றுள்ளது.
பா.ஜ.க.வின் நிர்வாக முறைக்கு கிடைத்த சான்றிதழ் ஆகும். மகாராஷ்டிராவில் பா.ஜ.க.விற்கு கிடைத்த வெற்றி வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. அம்மாநிலத்தில் அனைத்து சாதனைகளையும் பா.ஜ.க. முறியடித்துள்ளது என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்