search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    modi god - Arvind Kejriwal
    X

    பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் அல்ல - அரவிந்த் கெஜ்ரிவால்

    • அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
    • டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்று கொண்டார்.

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்று கொண்டார்.

    முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முதன்முறையாக டெல்லி சட்டசபையில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார்.

    அப்போது பேசிய கெஜ்ரிவால், "என்னையும் மணீஷ் சிசோடியாவையும் இங்கு பார்த்து எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் வருத்தப்படுவார்கள். பிரதமர் மோடி சக்தி வாய்ந்தவர், ஆனால் அவர் கடவுள் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் கடவுள் அல்லது ஒருவித ஆற்றல் நமக்கு உதவி செய்கிறது. எனக்கு பதவி ஆசை இல்லை. 3 முறை பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

    உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சில நாட்களுக்கு முன்பு ஒரு பாஜக தலைவரை சந்தித்தேன், என்னை சிறைக்கு அனுப்புவதால் உங்களுக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நாங்கள் முழு டெல்லி அசையும் தடம் புரட்டியுள்ளோம் என்று கூறினார்.

    மக்களவை தேர்தலுக்கு முன்பு ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்திருக்கிறார்.

    அதில் பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்" என்று பேசியிருந்தார்.

    Next Story
    ×