search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநில மொழிகளில் தீர்ப்புகள் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பிரதமர் மோடி பாராட்டு
    X

    பிரதமர் மோடி

    மாநில மொழிகளில் தீர்ப்புகள் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பிரதமர் மோடி பாராட்டு

    • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மும்பையில் பார் கவுன்சில் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
    • அப்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சமீபத்தில் மும்பையில் நடந்த பார் கவுன்சில் நிகழ்ச்சியில் பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிட வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசியுள்ளார். அதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். இது பாராட்டத்தக்க சிந்தனை. ஏராளமானோருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், தலைமை நீதிபதி பேச்சு அடங்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×