என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் வளர்ச்சிக்கு பாஜக தொடர்ந்து உழைக்கும்- பிரதமர் மோடி
- பாராளுமன்ற தேர்தலுடன் 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.
- மாநிலங்களுக்கு மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.
இந்நிலையில், இன்று அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 44 தொகுதிகளில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
ஆனால், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 26க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது. இதில், பாஜகவும், காங்கிரசும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இரு மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நன்றி அருணாச்சல பிரதேசம்! இந்த அற்புதமான மாநிலத்தின் மக்கள், அரசியல் வளர்ச்சிக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.
பாஜக மீது மீண்டும் நம்பிக்கை வைத்த தங்களுக்கு எனது நன்றிகள். மாநிலத்தின் வளர்ச்சிக்காக எங்கள் கட்சி இன்னும் அதிக வீரியத்துடன் பாடுபடும்.
தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் விதிவிலக்கான பாஜக நிர்வாகிகளின் கடின உழைப்பை நான் பாராட்ட விரும்புகிறேன். அவர்கள் மாநிலம் முழுவதும் சென்று மக்களுடன் இணைந்த விதம் பாராட்டுக்குரியது.
2024ம் ஆண்டு சிக்கிம் சட்டமன்றத் தேர்தல்களில் அவர்களின் வெற்றிக்காக எஸ்கேஎம் மற்றும் முதலமைச்சர் தமாங்கோலேக்கு வாழ்த்துக்கள். வரும் காலங்களில் சிக்கிமின் முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்த மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்.
சிக்கிம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன். சிக்கிமின் வளர்ச்சி மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் எங்கள் கட்சி எப்போதும் முன்னணியில் இருக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்