என் மலர்tooltip icon

    இந்தியா

    சிவமொக்கா விமான நிலையம் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
    X

    சிவமொக்கா விமான நிலையம் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

    • ரூ.384 கோடி செலவில் சிவமொக்கா விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • அந்த விமான நிலையம் தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ரூ.384 கோடி செலவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று காலை நடக்க உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.

    இது கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையம் ஆகும். எடியூரப்பாவின் 80-வது பிறந்தநாளில் சிவமொக்கா விமான நிலையம் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த விமான நிலையம் தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி வருகையையொட்டி சிவமொக்காவில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×