என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
டெல்லி இந்தியா கேட்டில் பிரமாண்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை திறப்பு
- இந்தியா கேட் பகுதியில் மின்ஒளி வடிவில் இருந்த சிலைக்கு பதில் புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- நேதாஜியின் வாழ்க்கை குறித்த ட்ரோன் கண்காட்சி நாளை முதல் 11ந் தேதிவரை இரவு 8 மணிக்கு இடம் பெற உள்ளது.
புதுடெல்லி:
இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் தினத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 23ந் தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நேதாஜிக்கு அதே இடத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்திருந்தார்.
அதன்படி இந்தியா கேட் பகுதியில் மின்ஒளி வடிவில் இருந்த சிலைக்கு பதில் புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது. மோனோலித்திக் கிரானைட் கற்களால் 28 அடி உயரம் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நேதாஜி சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
மேலும், நேதாஜியின் வாழ்க்கை குறித்த ட்ரோன் கண்காட்சி இந்தியா கேட் பகுதியில் நாளை முதல் 11ந் தேதிவரை இரவு எட்டு மணிக்கு இடம் பெற உள்ளது. இதனைப் பார்வையாளர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக நேதாஜி சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.