என் மலர்
இந்தியா
X
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடல்
Byமாலை மலர்4 Jan 2023 4:10 AM IST
- நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
- மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார்.
புதுடெல்லி:
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கும் வகையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். வரும் 27-ம் தேதி காணொலி மூலமாக இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தேர்வினால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான உதவிக் குறிப்புகளை பிரதமர் மோடி மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார்.
நிகழ்ச்சியின்போது போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 2,000 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சகம் பரிசு வழங்க உள்ளது.
Next Story
×
X