என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மதக் கலவரத்தை தூண்டியதாக பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா கைது
- இந்துக்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களை மாநில அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.
- தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் வெறுப்புப் பேச்சு பேசியதற்காக பா.ஜ.க. எம்.பி. கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:
கர்நாடக தலைநகர் பெங்களூருவின் மத்திய பகுதியான அல்சூர் கேட் காவல் நிலைய எல்லையிலுள்ளது சித்தண்ணா லே அவுட். இங்கு இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் கடையில் கடந்த 17-ம் தேதி மாலை அனுமன் பாடல்கள் சத்தமாக ஒலிக்கப்பட்டதாகவும், அங்கு வந்த சில இளைஞர்கள் இந்தப் பாடல் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது கடை உரிமையாளரை இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நடவடிக்கைக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்துக்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களை மாநில அரசு தடுத்து நிறுத்தவேண்டும். குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.யான தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், பெங்களூருவில் தேஜஸ்வி சூர்யா மற்றும் ஷோபா கரந்தலாஜே போன்ற பா.ஜ.க. தலைவர்கள் போராட்டம் நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், மத ரீதியான வெறுப்புப் பேச்சுகளை பேசியதற்காக அவர்களை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.