search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரசுக்கு கிடைக்கும் இடங்கள் இத்தனை தான்: பிரசாந்த் கிஷோர்
    X

    காங்கிரசுக்கு கிடைக்கும் இடங்கள் இத்தனை தான்: பிரசாந்த் கிஷோர்

    • காங்கிரஸ் கட்சி 2014-ம் ஆண்டில் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
    • 2019-ம் ஆண்டில் அக்கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இந்நிலையில், பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:

    பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராவார்.

    பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை.

    காங்கிரஸ் 55 தொகுதிகளில் இருந்து 65 அல்லது 68 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பது என்பது பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்? என தெரிவித்தார்.

    2014-ம் ஆண்டில் 44 தொகுதிகளிலும், 2019-ம் ஆண்டில் 52 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×