search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்
    X

    புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்

    • பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • 2025 சட்டசபை தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி போட்டியிடும் என அறிவிப்பு.

    தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர்.

    பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதைமுன்னிட்டு, அம்மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு ஜன் சூராஜ் கட்சி என பெயர் சூட்டியுள்ளார்.

    அதன்படி, பீகார் தலைநகர் பாட்னாவில் தனது அமைப்பான ஜன் சூராஜ் அபியான் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், "புதிய கட்சி வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி தொடங்கப்படும். தனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும். கட்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு கோடி உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக ஜன் சூராஜ் கட்சி இருக்கும். புதிய கட்சி வரலாற்றில் இடம் பிடிக்கும்.

    இந்தக் கட்சி எந்தவொரு குறிப்பிட்ட சாதி, குடும்பம் அல்லது சமூகத்துக்குள் நின்றுவிடாது. இது பீகார் மக்களின் கூட்டு முயற்சி" என்றார்.

    இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை இன்று தொடங்கினார்.

    மேலும், 2025 சட்டசபை தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி போட்டியிடும் என பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×