search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிக்கான பாதையை அரசு வகுத்துள்ளது: ஜனாதிபதி
    X

    அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிக்கான பாதையை அரசு வகுத்துள்ளது: ஜனாதிபதி

    • முதன்முறையாக போர் விமானிகளாக பெண்கள் உள்ளனர்.
    • சூரிய மின்சக்தி உற்பத்தியில் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளோம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2 கோடிக்கும் அதிகமான பெண்களை லட்சாதிபதிகளாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    * முதன்முறையாக போர் விமானிகளாக பெண்கள் உள்ளனர்.

    * பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின்கீழ் ரூ.2.80 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    * நெல், கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

    * வேளாண் ஏற்றுமதி நான்கு லட்சம் கோடியை கடந்துள்ளது.

    * மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டைக்கான பயன்கள் கிடைத்துள்ளது.

    * சுத்தமான குடிநீர் மூலம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

    * மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களை நிறைவேற்று வருகிறோம்.

    * மலைவாழ் கிராமங்களுக்கும், முதல்முறையாக மின்சாரம் இன்டர்நெட் வசதி கிடைத்துள்ளது.

    * 200க்கும் அதிகமாக பழங்குடியின கிராமங்களில் முதல்முறையாக குடிநீர், மின்சாரம் கிடைத்துள்ளது.

    * விஸ்வகர்மா திட்டம் மூலம் எளிதாக கடனுதவி வழங்கப்படுகிறது.

    * விஸ்வகர்மா சமுதாயத்தினருக்கு பயனளிக்கும் வகையில் பி.எம். விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * சாலையோர சிறு வியாபாரிகள் பிரதமர் ஸ்வநிதி திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

    * இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 28 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    * நாட்டில் உள்ள கிராமங்களை மேம்படுத்த துடிப்பான கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது.

    * அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிக்கான பாதையை அரசு வகுத்துள்ளது.

    * இன்று இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    * சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளன.

    * இன்று மேக் இன் இந்தியா பொருட்கள் உலக அளவிலான பிராண்டாக மாறி உள்ளது.

    * சூரிய மின்சக்தி உற்பத்தியில் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளோம்.

    * வரும் நாட்களில் மேலும் 9 சோலார் பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    * ஒரு கோடி வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள் பதிக்கும் சூர்யோதய் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

    * பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும்.

    * இந்தியாவிற்கென சொந்த விண்வெளி மையம் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    * புதிய தேசியக் கல்விக்கொள்கை வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    * பொறியியல், மருத்துவ படிப்புகளை தேசிய கல்விக்கொள்கையின் கீழ் தாய் மொழியில் வழங்க அறிவுறுத்தல்.

    * அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் இடைநிற்றல் கணிசமாக குறைந்துள்ளது.

    * 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

    * மருத்துவ படிப்புகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

    * இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

    Next Story
    ×