என் மலர்
இந்தியா
குடியரசுத் தலைவரின் உரை இப்படி இருந்திருக்கக் கூடாது - ராகுல் காந்தி காட்டம்
- வேலையின்மை பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் மோடி தவறிவிட்டார்.
- வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "கடந்த முறையும் அதற்கு முந்தைய முறையும் கூறப்பட்ட விஷயங்களையே இந்த முறையும் குடியரசுத் தலைவர் உரையில் கிட்டத்தட்டக் கேட்டேன். குடியரசுத் தலைவரின் உரை இப்படி இருந்திருக்கக் கூடாது.
நாட்டின் வளர்ச்சி மெதுவாக உள்ளது. உற்பத்தி துறையில் இந்தியா பின் தங்கியுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டத்தை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் உலகளாவிய பிரச்சனை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து தெளிவான பதிலை அளிக்கவில்லை. வேலையின்மை பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் மோடி தவறிவிட்டார். வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இளைஞர்களுக்கு எந்த ஒரு திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
#WATCH | Lok Sabha LoP Rahul Gandhi says, "...Even though we have grown, we've grown fast, growing slightly slower now but we are growing. A universal problem that we have faced is that we have not been able to tackle the problem of unemployment. Neither the UPA govt nor today's… pic.twitter.com/RIzjEusYv1
— ANI (@ANI) February 3, 2025