என் மலர்
இந்தியா
பிரதமரை சந்தித்த குகேஷ்- நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து பெற்றார்
- உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி.
- குகேஷை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, உலக சாம்பியனிடம் கையெழுத்திட்ட செஸ் போர்டை பெற்றுக்கொண்டார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார்.
இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இவருக்கு பரிசு கோப்பை, பதக்கத்துடன் ரூ.11½ கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பிலும் அவருக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குகேஷூக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் குகேஷை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.
அப்போது குகேஷ், பிரதமர் மோடிக்கு தான் மற்றும் டிங் லிரேன் கையெழுத்திட்ட இறுதிப்போட்டியில் விளையாடிய செஸ் போர்டை நினைவு பரிசாக வழங்கினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
செஸ் சாம்பியனும் இந்தியாவின் பெருமையுமான குகேஷ் உடன் எனக்கு சிறந்த தொடர்பு இருக்கிறது. நான் சில வருடங்களாக அவருடன் நெருக்கமாகப் பழகி வருகிறேன், அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது உறுதியும் அர்ப்பணிப்பும்தான்.
அவரது தன்னம்பிக்கை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இளைய உலக செஸ் சாம்பியனாக வருவேன் என்று அவர் கூறிய ஒரு வீடியோவைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அவரது சொந்த முயற்சிகளால் இப்போது அந்த கணிப்பு நிறைவேறியுள்ளது.
குகேஷிடமிருந்து அவர் வென்ற போட்டியின் அசல் செஸ் போர்டை பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மற்றும் டிங் லிரன் இருவரும் கையெழுத்திட்ட செஸ் போர்ட், ஒரு நேசத்துக்குரிய நினைவுப் பரிசு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Had an excellent interaction with chess champion and India's pride, @DGukesh!I have been closely interacting with him for a few years now, and what strikes me most about him is his determination and dedication. His confidence is truly inspiring. In fact, I recall seeing a video… pic.twitter.com/gkLfUXqHQp
— Narendra Modi (@narendramodi) December 28, 2024