search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மனித குலத்திற்கு எதிரானது: பயங்கரவாத தாக்குதலுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்
    X

    மனித குலத்திற்கு எதிரானது: பயங்கரவாத தாக்குதலுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

    • சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு.
    • 6 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு டாக்டரும் கொல்லப்பட்டார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் ஒரு மருத்துவர் மற்றும் ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    அப்பாவி பொதுமக்களை கொலை செய்வது, பொதுமக்கள் இடையே வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை பரப்புவது போன்ற செயல்கள் மனித குலத்திற்கு எதிரானது. இந்த செயலுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து நிற்கிறது. உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடை வேண்டுகிறேன்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் எனும் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானம் நடைபெற்று வருகிறது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்டர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

    ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×