search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தடை எதிரொலி- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கேரளாவில் கலைக்கப்பட்டதாக அறிவிப்பு
    X

    அப்துல் சத்தார் (கோப்பு படம்)

    தடை எதிரொலி- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கேரளாவில் கலைக்கப்பட்டதாக அறிவிப்பு

    • பி.எப்.ஐ. இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.
    • பி.எப்.ஐ. பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் கைது செய்யப்பட்டதாக தகவல்.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் அந்த அமைப்புகள் செயல்பட 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக, அந்த அமைப்பின் இணையதளம், டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளையும் முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையை அடுத்து கேரளாவில் பி.எப்.ஐ. அமைப்பை கலைத்து விட்டதாக அதன் பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த நாட்டின் சட்டத்தின்படி செயல்படுகிற குடிமக்களாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவை தங்கள் அமைப்பு ஏற்றுக்கொள்கிறது என்றும், பி.எப்.ஐ. கலைக்கப்பட்டு விட்டது என அதன் உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் சட்டரீதியாக இதை எதிர்கொள்ள உள்ளதாகவும் அப்துல் சத்தார் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவர், கருநாகப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×