என் மலர்
இந்தியா
மீன்தொட்டி- டிஸ்கோ விளக்கு அலங்காரத்தால் ஜொலித்த ஆட்டோ- வீடியோ
- வீடியோவில் டிரைவர் இருக்கைக்கு பின்னால் உள்ள இடத்தில் மீன் தொட்டி பொருத்தப்பட்டுள்ளது.
- வீடியோ வைரலான நிலையில் ஆட்டோ டிரைவரின் ஆர்வத்தை பலரும் பாராட்டினர்.
நகர பகுதிகள் முதல் கிராமப்பகுதிகள் வரை போக்குவரத்துக்கு ஆட்டோ சவாரியை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சில ஆட்டோ டிரைவர்கள் தங்களது வாகனத்தில் வித்தியாசமான அலங்காரங்கள் செய்வது, ஆட்டோவிலேயே ஏராளமான புத்தகங்கள் வைத்து நூலகம் போன்று அமைப்பது போன்ற செயல்களால் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புனேவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் மீன்தொட்டி மற்றும் ஸ்பீக்கர்கள், டிஸ்கோ விளக்குகளால் அலங்காரம் செய்துள்ள காட்சிகள் உள்ளது.
வீடியோவில் டிரைவர் இருக்கைக்கு பின்னால் உள்ள இடத்தில் மீன் தொட்டி பொருத்தப்பட்டுள்ளது. அதில் வண்ண மீன்கள் நீந்தி செல்கின்றன. ஆட்டோ முழுவதும் டிஸ்கோ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மீன் தொட்டிகளுக்கு மேல் சிறிய ஸ்பீக்கர்களும் நிறுவப்பட்டுள்ளன. இந்த வீடியோ வைரலான நிலையில் ஆட்டோ டிரைவரின் ஆர்வத்தை பலரும் பாராட்டினர்.