search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தியை பாராளுமன்றத்துக்குள் பூட்டி வைத்து அறைய வேண்டும்.. பாஜக எம்எல்ஏ சர்ச்சை
    X

    'ராகுல் காந்தியை பாராளுமன்றத்துக்குள் பூட்டி வைத்து அறைய வேண்டும்'.. பாஜக எம்எல்ஏ சர்ச்சை

    • 'கடவுள் சிவன் தனது நெற்றிக் கண்ணை திறத்தால் தான் சாம்பலாகி விடுவோம் என்று பைத்தியக்காரருக்கு [ராகுல் காந்திக்கு] தெரியாது'
    • பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் குரைப்புக்கெல்லாம் இங்கிருந்து சென்ற உள்ளூர் தலைவர்கள் தங்களின் வாலை ஆட்டுகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தின் வடக்கு மங்களூரு தொகுதி பாஜக எம்.எல்.ஏ பரத் செட்டி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாராளுமன்றதுக்குள் பூட்டி வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ராகுல் காந்தி மகளூருக்குள் வந்தாலும் அவருக்கு அதே கதிதான்' என்றும் பரத் செட்டி தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் இந்து மதக் கடவுள் சிவனின் படத்தை ராகுல் காந்தி கையில் ஏந்தி பஜகவினர் முன் காட்டியது குறித்து பேசும்போது பரத் செட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார். அதுகுறித்து தொடர்ந்து அவர் பேசுகையில், 'கடவுள் சிவன் தனது நெற்றிக் கண்ணை திறத்தால் தான் சாம்பலாகி விடுவோம் என்று பைத்தியக்காரருக்கு [ராகுல் காந்திக்கு] தெரியாது. ஹிந்துக்களை குறித்து என்ன சொன்னாலும் அவர்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் என்று அவர் நினைக்கிறார். பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் குரைப்புக்கெல்லாம் இங்கிருந்து சென்ற உள்ளூர் தலைவர்கள் தங்களின் வாலை ஆட்டுகின்றனர்.

    இந்து மதத்தையும், கோவில்களையும் பாதுகாப்பதை பாஜக கடமையாக பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ், இந்து மதமும் இந்துத்துவாவும் வேறு வேறு என்று சொல்லி வருகிறது. இதுபோன்ற தலைவர்களால் வருங்காலத்தில் இந்துக்கள் ஆபத்தை சந்திக்க நேரிடும். இந்து மதம் குறித்த தனது நிலைபாட்டை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும் ராகுல் காந்தி, குஜராத்துக்கு சென்றால் மட்டும் கடவுள் சிவனின் தீவிர பக்தராக மாறிவிடுகிறார்.

    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து வெறும் 99 இடங்களில் ஜெயித்துள்ள நிலையில் எதோ மிகப்பெரிய சாதனையை செய்தததாக ராகுல் காந்தி கூறி வருகிறார்' என்று பரத் செட்டி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி குறித்த பரத் செட்டி பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில் அவர் மீது காங்கிரஸ் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×