search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திடீர் விசிட்: நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி
    X

    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திடீர் விசிட்: நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி

    • ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று இரவு திடீரென சென்றார்.
    • நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

    புதுடெல்லி:

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சமீபகாலமாக லாரி டிரைவர், செருப்பு தைக்கும் தொழிலாளி, ரெயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட தொழில் சார்ந்தவர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராகுல் காந்தி நேற்று இரவு திடீரென சென்றார்.

    எய்ம்ஸ் மருத்துவமனையைச் சுற்றியுள்ள சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக, ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று நான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சைக்காக வந்த நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். அவர்கள் சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குளிர்ந்த நிலம், பசி மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் சுடரை எரித்துக்கொண்டே இருக்கிறார்கள். மத்திய அரசும், டெல்லி அரசும் பொதுமக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளன என காட்டமாக தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×