என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கர்நாடகா சட்டசபை தேர்தல் - ஜெய் பாரத் யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி
Byமாலை மலர்1 April 2023 6:03 AM IST (Updated: 1 April 2023 6:36 PM IST)
- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி.
- வரும் 9ம் தேதி கர்நாடகம் முழுதும் ஜெய் பாரத் யாத்திரை தொடங்க உள்ளார்.
புதுடெல்லி:
மோடி சமூகம் குறித்த அவமதிப்பு வழக்கில் சூரத் கோர்ட் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது மக்களவை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தன. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி வியூகம் வகுத்திட திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வரும் 9-ம் தேதி முதல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திலிருந்து ஜெய் பாரத் என்ற பெயரில் யாத்திரை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
ராகுல் காந்தி சமீபத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×