search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சாதி தெரியாதவர்கள்... சர்ச்சையான அனுராக் தாக்கூர் பேச்சு.. ராகுலின் சாதி இதுதான் - காங்கிரஸ் பதில்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சாதி தெரியாதவர்கள்... சர்ச்சையான அனுராக் தாக்கூர் பேச்சு.. ராகுலின் சாதி இதுதான் - காங்கிரஸ் பதில்

    • சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்
    • இந்தியாவின் 80 சதவீத மக்கள் நேற்று பாராளுமன்றத்தில் அவமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் நேற்று நடந்த பட்ஜெட் விவாத கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த காரசாரமான விவாதம் நடைபெற்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வலியுறுத்தி வரும் நிலையில் பாஜக அதற்கு எதிரான மனநிலையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அனுராக் தாகூருக்கும், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று மக்களவையில் அனுராக் தாக்கூர் பேசுகையில், சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

    அனுராக் தாகூர் வெளிப்படையாக ராகுல் காந்தியை சாதிய கன்னூட்டத்தில் இழிவுபடுத்தி பேசியது எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதேவேளையில் ராகுல் காந்தி "நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம். ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தில் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம் என்றார்.

    இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் நேற்று அனுராக் தாக்கூர் பேசியதை அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று கூறியுள்ளதும் காங்கிரசார் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜக எம்.பி அனுராக் தாகூரின் ஜாதி குறித்த பேச்சினால், இந்தியாவின் 80 சதவீத மக்கள் நேற்று பாராளுமன்றத்தில் அவமதிக்கப்பட்டுள்ளனர். இது மோடியின் கட்டளையின்படியே நடந்ததா என்று அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா,பாஜகவின் உண்மையான முகம் நேற்றைய கருத்து மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இன்னும் வருங்காலங்களில் பாஜகவின் முகத்திரை கிழியும்.

    நாட்டுக்காக உயிர்த் தியாகங்களை செய்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை [ராகுல் காந்தியை] இழிவுபடுத்தும் பின்புத்தி பாஜக உடையதாக மட்டுமே இருக்கும். ராகுல் காந்தியின் தந்தையும் தாயும் உயிர்த்தியாகிகள், எனவே அவரது சாதி தியாகமே ஆகும். ஆர்எஸ்எஸ் அமைப்போ, பாஜகவோ, அனுராக் தாக்கூரோ இதை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×