என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பா.ஜனதா கூட்டணி குறித்து ராஜ்நாத்சிங் ஆலோசனை- திருப்பதியில் போட்டியிட தீவிரம்
- சந்திரபாபு நாயுடு கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
- தெலுங்கு தேசம் கூட்டணியில் திருப்பதி தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பா.ஜனதா தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கூட்டணியில் சிக்கல் நீடித்து வருகிறது.
தொகுதி உடன்பாடு ஏற்படும் முன்னதாகவே சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ளது.
இதனால் பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்துள்ளது நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி உள்ளது. ஆனால் சந்திரபாபு நாயுடு கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கூட்டணி குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகளின் கருத்துக்களை ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
டெல்லி மேலிட தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அந்த மாநில தலைவர் புரந்தேஸ்வரி தெரிவித்தார்.
ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருப்பதி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே 1999-ம் ஆண்டு இந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கூட்டணியில் திருப்பதி தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பதி தொகுதியில் பா. ஜனதா வேட்பாளராக மாநில செயலாளர் முனி சுப்பிரமணியம் அல்லது கர்நாடக மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ரத்தன பிரபாவின் மகள் நிகாரிகா ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.