search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர் இந்தியாவின் அடித்தளம்- பிரதமர் மோடி வாழ்த்து
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர் இந்தியாவின் அடித்தளம்- பிரதமர் மோடி வாழ்த்து

    • நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.
    • இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

    ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

    ராம நவமியை முன்னிட்டு அயோத்தியா ராமர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அயோத்தியில் ராமர் பிரதிஷ்டைக்குப் பிறகு முதல் ராம நவமி ஒரு தலைமுறை மைல்கல் ஆகும். இது நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துடன் பல நூற்றாண்டுகளின் பக்தியை ஒன்றிணைக்கிறது.

    கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கும் நாள் இது. இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

    பிரபு ஸ்ரீராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்துகொண்டு, நம் வாழ்வில் ஞானத்துடனும் தைரியத்துடனும் ஒளியூட்டி, நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.

    ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர் இந்தியாவின் அடித்தளம்...

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×