search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹெச்.டி.எஃப்.சி., ஆக்சிஸ் வங்கிகளுக்கு 2.91 கோடி ரூபாய் அபராதம் விதித்த ஆர்.பி.ஐ.
    X

    ஹெச்.டி.எஃப்.சி., ஆக்சிஸ் வங்கிகளுக்கு 2.91 கோடி ரூபாய் அபராதம் விதித்த ஆர்.பி.ஐ.

    • இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணிக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை.
    • ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனம் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்காத காரணத்திற்காக ஹெச்.டி.எஃப்.சி. வங்கிற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்த ஆர்பிஐ, ஆக்சிஸ் வங்கிற்கு 1.92 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

    டெபாசிட் பணத்திற்கான வட்டி விகிதம், கடன் வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஏஜென்ட், கஸ்டமர் சர்வீஸ் ஆகியவற்றில் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு ஹெச்.டி.எஃப்.சி. வங்கி இணங்காதது தெரியவந்தது. 2002 மார்ச் 31, வங்கியின் நிதி நிலை தொடர்பாக ஆர்பிஐ ஆய்வில் இந்த குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது.

    ஹெச்.டி.எஃப்.சி. இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணிக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதை உறுதி செய்வதில் வங்கி தோல்வியடைந்து விட்டதாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

    ஆக்சிஸ் வங்கி தகுதியற்ற நிறுவனங்களுக்கு கணக்கு தொடங்கியது. தனிப்பட்ட வாடிக்கையாளர் அடையாளக் குறியீட்டிற்குப் பதிலாக பல வாடிக்கையாளர் அடையாளக் குறியீடுகளை வழங்கியது. 1.60 லட்சம் வரையிலான விவசாய கடன்களுக்கு பிணையம் (ஓரிரு வழக்கில்) ஏற்றுக் கொண்டது உள்ளிட்ட காரணத்திற்காக அபராதம் விதித்துள்ளது. மேலும், ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனம் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. இது வங்கி நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படாத வணிகமாகும்.

    இந்த நடவடிக்கையானது சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×