search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    97.69 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பியது- ரிசர்வ் வங்கி
    X

    97.69 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பியது- ரிசர்வ் வங்கி

    • 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
    • 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    கடந்த மே 19-ந் தேதி, அந்த நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று அறிவித்தது. பின்னர், இந்த கால அவகாசம், அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று 2000 ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட 97.69 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும் மற்றும் 8,202 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்ட மே 19, 2023 அன்று வணிகம் முடிவடையும்போது ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு மார்ச் மாத வணிக முடிவில் ரூ.8,202 கோடியாகக் குறைந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், இதனால், மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.69 சதவீதம் திரும்பி வந்துவிட்டன. இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×