search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசு வேலை ஆட்சேர்ப்புக்கான விதிகளை பாதிவழியில் மாற்ற முடியாது: உச்சநீதிமன்றம்
    X

    அரசு வேலை ஆட்சேர்ப்புக்கான விதிகளை பாதிவழியில் மாற்ற முடியாது: உச்சநீதிமன்றம்

    • வெளிப்படைத்தன்மை மற்றும் பாகுபாடு இல்லாதது பொது ஆட்சேர்ப்பு செயல்முறையின் தனிச்சிறப்பாக இருக்க வேண்டும்.
    • தேர்வு விதிகள் தன்னிச்சையாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பின் 14-வது பிரிவின்படி இருக்க வேண்டும்.

    அரசு வேலைக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபகள் கொணட பெஞ்சு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு வேலைக்கான ஆட்சேர்ப்பு விதியை பாதி வழியில் மாற்ற முடியாது. அதாவது ஆட்சேர்ப்புக்கான நடைமுறைகள் தொடங்கியபின் பரிந்துரைக்கப்படாவிடில் மாற்ற முடியாது என நீதிபதிகள் ஒருமித்த கருத்து அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

    அத்துடன் தேர்வு விதிகள் தன்னிச்சையாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பின் 14-வது பிரிவின்படி இருக்க வேண்டும் என பெஞ்ச் தெரிவித்துள்ளது.

    வெளிப்படைத்தன்மை மற்றும் பாகுபாடு இல்லாதது பொது ஆள்சேர்ப்பு செயல்முறையின் தனிச்சிறப்பாக இருக்க வேண்டும் என்றும், நடுநிலையில் விதிகளை மாற்றுவதால் விண்ணப்பம் செய்தவர்கள் ஆச்சரியப்படக்கூடாது எனவும் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×