search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    RBI Governor Shaktikanta Das
    X

    9வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி

    • ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிப்பு.
    • 9வது முறைாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.

    ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இரண்டு நாள் நாணயக் கொள்கை குழு கூட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கியது. இன்று இந்த கூட்டம் முடவடியை உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. இதில் பலரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5% ஆக தொடரும். 9 ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. வட்டி விகிதம் குறைக்காமல் இருப்பதற்கு நாணய கொள்கை குழுவில் நான்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இரண்டு உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

    பெரும்பான்மை கருதி, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக வீடு, வாகன கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. வங்கிகளின் குறுகிய கால வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. இதனால் கடன் வாங்கியவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    கடந்த 2023 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி 6.5 சதவீதமாக நீடிக்கிறது. அமெரிக்க பொருளாதாக சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×