search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மகளிருக்கு மாதம் ரூ.2,100..  இலவச அறிவிப்புகளை அள்ளி  இறைத்த பாஜக - அனல்பறக்கும் ஜார்கண்ட் தேர்தல்
    X

    மகளிருக்கு மாதம் ரூ.2,100.. இலவச அறிவிப்புகளை அள்ளி இறைத்த பாஜக - அனல்பறக்கும் ஜார்கண்ட் தேர்தல்

    • அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பால் பாஜக கலக்கத்தில் உள்ளது
    • மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவதை விமர்சித்து வந்த பாஜக தற்போது ரூட்டை மாற்றியுள்ளது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.கடைசியாகக் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 30 தொகுதிகளைக் கைப்பற்றிய ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஹேமந்த் சோரன் தலைமையில் ஆட்சியமைத்தது. 25 தொகுதிகளை பாஜகவும், 16 தொகுதிகளைக் காங்கிரசும் கைப்பற்றியிருந்தன.

    இந்நிலையில் நடந்து முடித்த பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காதது, தற்போது நடந்த அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று வெளிவந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் உள்ளிட்டவற்றால் பாஜக கலக்கத்தில் உள்ளது.

    முக்தி மோர்ச்சா கட்சியின் முக்கியத் தலைவர் சம்பாய் சோரனை தங்கள் பக்கம் இழுத்தும் வெற்றி கிடைக்குமா என்பதில் சந்தேகத்துடன் உள்ள பாஜக வர உள்ள தேர்தலுக்கு இலவசங்களை அள்ளி வீசி வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவதை விமர்சித்து வந்த பாஜக தற்போது தங்கள் கொள்கையையும் தளர்த்தி ரூட்டை மாற்றியுள்ளது.

    ஜார்கண்ட்டில் தேர்தல் அறிவிக்கப்படும் முன்னரே பாஜக முந்திக்கொண்டு வெளியிட்ட இலவச அறிவிப்பு வாக்குறுதிகள் கீழ்வருமாறு,

    ➼18 வயதுக்கு மேலான மகளிருக்கு மாதம் ரூ. 2100 வழங்கும் திட்டம்

    ➼1 சிலிண்டர் ரூ.500 க்கு வழங்கப்படும்

    ➼பண்டிகை காலங்களில் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர்கள்

    ➼5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

    ➼போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.2,000 உதவித் தொகை

    ➼வீடற்றவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம்

    உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக வழங்கியுள்ளது.

    Next Story
    ×