search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகளிருக்கு மாதந்தோறும் ரூ.3000- தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்
    X

    மகளிருக்கு மாதந்தோறும் ரூ.3000- தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்

    • மகாராஷ்டிரா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. இன்று வெளியிட்டது.
    • மகா விகாஸ் அகாடி கூட்டணியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டார்.

    288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    அங்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்கும், எதிர்கட்சியான காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இதைதொடர்ந்து, மகாராஷ்டிரா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. இன்று வெளியிட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதை வெளியிட்டார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான மகா விகாஸ் அகாடி கூட்டணியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டார்.

    அப்போது, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    இதில், முக்கிய 5 அறிவிப்புகளாக, பெண்களுக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.3 லட்சம் வரையில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாகவும், கூடுதல் ஊக்கத்தொகையாக, கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

    மகாராஷ்டிராவில் வேலையில்லாத ஒவ்வொறு இளைஞருக்கும் மாதம் ரூ.4000 உதவித்தொகை வழங்கப்படும்.

    மகாராஷ்டிராவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ரூ.25 லட்சம் மதிப்பிலான சுகாதாரக் காப்பீட்டுத் தொகை பெறும்.

    சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முக்கிய வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×