search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்களின் வலியை உணர்ந்து பேசவேண்டும்: ஹேமமாலினிக்கு சமாஜ்வாடி எம்.பி. பதிலடி
    X

    மக்களின் வலியை உணர்ந்து பேசவேண்டும்: ஹேமமாலினிக்கு சமாஜ்வாடி எம்.பி. பதிலடி

    • கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாள் நடக்கிறது.
    • கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.

    கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

    கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர். மாநில அரசின் நிர்வாகம் சரியில்லை என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இதற்கிடையே, நடிகையும், பா.ஜ.க. எம்பியும் ஆன ஹேமமாலினி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு பெரிய சம்பவம் இல்லை. அது மிகைப்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், மக்களின் வலியையும், விரக்தியையும் பார்த்து புரிந்து கொண்டு பேச வேண்டும் என காட்டமாகத் தெரிவித்தார்.

    Next Story
    ×