search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுலை ஆக்ரோஷமாக பேசிய சத்யன்.. சைலன்டாக  எதிரே வந்த பிரியங்கா - சட்டென மாறிய சூழல் - வீடியோ
    X

    ராகுலை ஆக்ரோஷமாக பேசிய சத்யன்.. சைலன்டாக எதிரே வந்த பிரியங்கா - சட்டென மாறிய சூழல் - வீடியோ

    • இடது ஜனநாயக முன்னணி ( LDF ) சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார்.
    • ரேபரேலிக்காக ராகுல் காந்தி வயநாட்டை விட்டுச் சென்றவர் என்று பேசிக்கொண்டிருந்தார்

    மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி பதவி விலகியதை அடுத்து அங்கு வரும் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தல் அரசியல் பிரவேசத்தை வயநாட்டில் வேட்பாளராக நின்று தொடங்கியுள்ளார்.

    பிரியங்காவை எதிர்த்து ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் இடது ஜனநாயக முன்னணி ( LDF ) சார்பில் சத்யன் மொகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உட்பட 16 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

    பிரியங்கா காந்தியும் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கிடையே அவரை எதிர்த்து போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர் சத்யன் மொகேரி இன்று தனது பிரசாரத்தின்போது ராகுல் காந்தியை விமர்சித்துக்கொண்டிருந்தார்.

    ரேபரேலிக்காக ராகுல் காந்தி வயநாட்டை விட்டுச் சென்றவர், மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள் சத்யன் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டிருந்தபோது திடீரென நேரில் வந்த பிரியங்கா காந்தி அவர் பேசுவதை பொறுமையாக கேட்டுவிட்டு சத்யன் மொகேரிக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    Next Story
    ×