search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    அரியானா சட்டசபை தேர்தல்: சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் வெற்றி
    X

    அரியானா சட்டசபை தேர்தல்: சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் வெற்றி

    • அரியானாவின் ஹிசார் தொகுதியில் சாவித்ரி ஜிண்டால் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • அவர் குருஷேத்ரா தொகுதி பாஜக எம்பி நவீன் ஜிண்டாலின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பெறுகிறது.

    இந்நிலையில், ஹிசார் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் 49,231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராம் நிவாஸ் 30,290 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 19,000 ஆகும்.

    அதேபோல பா.ஜ.க. வேட்பாளராக களம் கண்டுள்ள அரியானாவின் மந்திரியும், ஹிசார் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கமல் குப்தா 17,385 வாக்குகள் பெற்று 3வது இடம் பெற்றுள்ளார்.

    சாவித்ரி ஜிண்டால் குருஷேத்ரா தொகுதி பா.ஜ.க. எம்பி நவீன் ஜிண்டாலின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×