என் மலர்
இந்தியா
அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும்: மத்திய மந்திரி
- தபால் நிலையங்களின் சேவைகளில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
- நாடு முழுவதும் 6,000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார் மத்திய மந்திரி.
புதுடெல்லி:
மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் கையால் கடிதங்கள் எழுதும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க நாம் முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அது இதயத்தின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
தபால் நிலையங்களின் சேவைகளில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் 6,000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
அதன்படி, நாட்டின் 543 தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வெளியுறவு அமைச்சகம் மற்றும் அஞ்சல்துறை ஆகியவை உறுதிகொண்டுள்ளன என தெரிவித்தார்.