என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது: இன்னும் 206 பேர் மிஸ்சிங்- பினராயி விஜயன்
- தற்போது வரை 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள் உடல்கள் அடங்கும்.
- 67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இன்னும் 206 பேரை காணவில்லை.
கேரள மாநிலம் வயநாட்டில் மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் கிராமங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. கடந்த 29-ந்தேதி இரவு கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. 30-ந்தேதியில் இருந்து மீட்புப்பணிகள் தொடங்கின. தற்போது வரை மாயமான மக்களை தேடுதல் மற்றும் மீட்புப்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் தேடுதல் மற்றும் மீட்புப்பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில் "தற்போதுவரை 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள் உடல்கள் அடங்கும். அவற்றில் 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் 206 பேரை காணவில்லை. 81 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பஞ்சாயத்து சார்பில் இறுதிச்சடங்கு நடத்தப்படும். பாதுகாப்பான பகுதி கணடறியப்பட்டு நகர்ப்புறம் உருவாக்கப்படும்.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.