search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விண்வெளியில் CROPS திட்டம்- இஸ்ரோ புதிய சாதனை
    X

    விண்வெளியில் CROPS திட்டம்- இஸ்ரோ புதிய சாதனை

    • விண்வெளியில் தாவரங்கள் வளர்கிறதா என்பது குறித்து இஸ்ரோ சோதனை.
    • விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான CROPS திட்டம் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதாக இஸ்ரோ அறிவிப்பு.

    விண்வெளி உயிரியல் ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டி உள்ளதாக இஸ்ரோ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

    விண்வெளியில் தாவரங்கள் வளர்கிறதா என்பது குறித்து இஸ்ரோ சோதனை செய்து வருகிறது. அந்த வகையில், பிஎஸ்எல்வி சி60 திட்டத்தில் விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

    விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான CROPS திட்டம் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    அதன்படி, விண்வெளியில் 4 நாட்களுக்குள் கௌபீயா விதைகள் முளைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விரைவில் இலைகள் உருவாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    POEM 4 என்ற தொகுதியில், 4 நாளில் விதைகள் முளைத்ததை இஸ்ரோ பதிவிட்டுள்ளது.

    சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் ராக்கெட் தொகுதியில் விதை முளைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×