என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பிளாட்பார்ம் டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு: நிர்மலா சீதாராமன்
- அனைத்து வகை பால் கேன்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
- மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் 53-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில நிதி மந்திரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
எஃகு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட பால் கேன்களுக்கு ஒரே சீரான 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
அட்டை பெட்டிகளுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு விலக்கு அளிக்கப்படும். மாணவர்கள் 90 நாட்கள் தங்கவேண்டும். மாத வாடகை ரூ.20 ஆயிரத்திற்கு மேல் இருக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்படுகிறது.
ரெயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, பொருட்கள் வைக்கும் அறை, பயணிகள் பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கான சேவை, ரெயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார்.