என் மலர்
இந்தியா
டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பல ஆம் ஆத்மி தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்
- டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
- 2020 தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியை பிடித்தது.
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பல ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.
கமலா நகர் வார்டில் இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்ட கபில் நாகர், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருடன் 100க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங்கும் கலந்து கொண்டார்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி 62 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 இடங்களில் மட்டும் தான் வெற்றியை பெற்றது.