search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒடிசாவில் கடந்த 25 ஆண்டில் சுகாதாரம், கல்வி உள்ளிட்டவை தடம்புரண்டுள்ளன: அமித்ஷா தாக்கு.
    X

    ஒடிசாவில் கடந்த 25 ஆண்டில் சுகாதாரம், கல்வி உள்ளிட்டவை தடம்புரண்டுள்ளன: அமித்ஷா தாக்கு.

    • ஒடிசாவின் பூரி நகரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி பங்கேற்றார்.
    • தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என கேள்வி எழுப்பினார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பூரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தத் தேர்தல் மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்குவதற்கான தேர்தல். இந்தத் தேர்தல் ஜெகந்நாதரின் பெருமையையும் சுயமரியாதையையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கான தேர்தல்.

    நாட்டிலேயே மிகவும் வளமான, கனிம வளம் நிறைந்த மாநிலமாக ஒடிசா இருப்பினும் மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். மக்களின் ஏழ்மையைப் போக்க வேண்டுமானால் பிரதமர் மோடிக்கு வாக்களித்து அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும்.

    நவீன் பட்நாயக்குக்கு நீங்கள் 25 ஆண்டுகள் கொடுத்தீர்கள். 25 ஆண்டு கால அவரது ஆட்சியில் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு என அனைத்தும் தடம் புரண்டுள்ளன. நவீன் பாபுவின் அரசு போலி அரசு.

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்குகிறார். நவீன் பாபு, அதன் மீது தனது ஸ்டிக்கரை ஒட்டி ஏழைகளுக்கு வழங்குகிறார்.

    தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் 2 ஆண்டுகளில் ரூ.50,000 வழங்கப்படும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும். மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும். 1.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

    ஒடிசா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க 75 இடங்களில் பா.ஜ.க.வை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி அமைக்க முடியுமா? ஒடிசாவின் முதல் மந்திரியாக வரக்கூடியவர், ஒடியா மண்ணைச் சேர்ந்தவராகவும், ஒடியா மொழி பேசக் கூடியவராகவும் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×