என் மலர்tooltip icon

    இந்தியா

    எங்களுக்கு அதிகாரப் பசி கிடையாது, மக்களுக்காக உழைக்கிறோம் - சரத் பவார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    எங்களுக்கு அதிகாரப் பசி கிடையாது, மக்களுக்காக உழைக்கிறோம் - சரத் பவார்

    • சரத் பவார் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.
    • அப்போது பேசிய அவர், எங்களுக்கு அதிகாரப் பசி கிடையாது, மக்களுக்காக உழைக்கிறோம் என்றார்.

    மும்பை:

    மும்பையில் தனது எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்தில் தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் பேசியதாவது:

    மகாராஷ்டிராவில் கடந்த 24 ஆண்டுகளாக தேசியவாத காஙகிரஸ் கட்சி வலுவான தலைமையை உருவாக்கியுள்ளது. மக்கள் நலன்களைப் பற்றி கவலைப்படாதவர்களின் கைகளில் இந்தியாவின் ஆட்சி உள்ளது.

    எங்களுக்கு அதிகாரப் பசி இல்லை; தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம்.

    இன்று ஒட்டுமொத்த நாடும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த சந்திப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது. நம் வழியில் தடைகள் இருந்தாலும் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.

    நமது சின்னத்தை யாரும் பறிக்க அனுமதிக்க மாட்டோம். யாரும் கவலைப்பட தேவையில்லை என தெரிவித்தார்.

    Next Story
    ×