search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வங்காளதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்
    X

    வங்காளதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

    • இந்தியா-வங்காளதேச எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
    • பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் டாக்காவுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தியது.

    புதுடெல்லி:

    வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த நில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை மிகப்பெரிய அளவில் வெடித்தது.

    இதற்கிடையே, இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    அவர் பயணம் செய்த ராணுவ விமானம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அவரை ராணுவ அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    இந்தியா வந்தடைந்த ஷேக் ஹசீனா விரைவில் லண்டன் செல்ல உள்ளார் என தகவல்கள் வெளியாகின.

    வங்காளதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், டாக்காவுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தி உள்ளது.

    மேலும், இந்தியா-வங்காளதேச எல்லை முழுவதும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×