search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    shivaji statue - modi
    X

    மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்தது - காங்கிரஸ் விமர்சனம்

    • பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது.
    • ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள்கூட தப்பவில்லை.

    மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்தார்.

    கடந்த மூன்று நாட்களாக சிந்துதுர்க்கில் கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசி வரும் நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் 35 அடி உயரமுள்ள சத்ரபதி சிவாஜி சிலை முழுமையாக உடைந்து தலை, கை, கால்கள் என ஒவ்வொரு பாகமும் தரையில் வீழுந்தது.

    சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளது

    அந்த பதிவில், "பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது. பிரதமர் மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்துள்ளது. ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள்கூட தப்பவில்லை" என்று பதிவிட்டுள்ளது.

    அந்த பதிவில், சிவாஜி சிலையை மோடி திறந்து வைத்தது மற்றும் சிலை உடைந்து விழுந்தது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது.

    Next Story
    ×