search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி- பிரதமர் மோடி சந்திப்பு: கேள்வி எழுப்பிய பிரசாந்த் பூஷன்
    X

    உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி- பிரதமர் மோடி சந்திப்பு: கேள்வி எழுப்பிய பிரசாந்த் பூஷன்

    • தலைமை நீதிபதி மோடியை அவரது இல்லத்தில் தனிப்பட்ட சந்திப்பிற்காகச் சந்திக்க அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது.
    • மதம் சார்ந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக சந்தித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் டி.ஒய். சந்திரசூட். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நேற்று கணபதி பூஜை நடைபெற்றது. இந்த கணபதி பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்து கொண்டார்.

    பிரதமர் மோடியை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடி மகாராஷ்டிராவினர் அணியும் தொப்பியை அணிந்திருந்தார். அத்துடன் பூஜை செய்து வழிபட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

    இந்தநிலையில் சமூக ஆர்வலரான பிரசாந்த் பூஷன், பிரதமர் மோடி, உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டிற்குச் சென்றது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக பிரசாந்த் பூஷன் கூறியதாவது:-

    தலைமை நீதிபதி சந்திரசூட் மோடியை அவரது இல்லத்தில் தனிப்பட்ட சந்திப்பிற்காகச் சந்திக்க அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. தலைமை நீதிபதி பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதுவும் மதம் சார்ந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக சந்தித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இந்த சந்திப்பு குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்குள் அரசு செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ள நீதித்துறைக்கு மிக மோசமான சமிக்ஞையை அனுப்புகிறது. அதனால்தான் நிர்வாகத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும். எனது பார்வையில் இந்த சந்திப்பு நீதிபதிகளுக்கான விதிமுறையை மீறியதாகவும்.

    இவ்வாறு பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×