search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இடைக்கால பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் படைக்க இருக்கும் அரிய சாதனை
    X

    இடைக்கால பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் படைக்க இருக்கும் அரிய சாதனை

    • மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தொடர்ந்து ஐந்து முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
    • மொரார்ஜி தேசாய் ஆறுமுறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைத்தபோது நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.

    அதில் இருந்து தற்போது வரை அவர்தான் நிதியமைச்சராக இருந்து வருகிறார். வருகிற 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்கு முன்னதாக முழுமையாக 5 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது 6-வது முறையாக பட்ஜெட் (இடைக்கால) தாக்கல் செய்ய இருக்கிறார்.

    இதன்மூலம் தொடர்ந்து ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது நிதியமைச்சர் என்ற சாதனையைப் படைக்க இருக்கிறார்.

    இதற்கு முன்னதாக மொரார்ஜி தேசாய் (1959-1964) ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் ஐந்து முறை முழுமையான பட்ஜெட். ஒருமுறை இடைக்கால பட்ஜெட். இதுபோன்றுதான் நிர்மலா சீதாராமனும் ஐந்து முறை முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

    மோடி தலைமையிலான பா.ஜனதா கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்தது. அப்போது அருண் ஜெட்லி நிதியமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவர் ஐந்து பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். 2017-ல் பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 1-ந்தேதிக்கு மாற்றி முதன்முறையாக தாக்கல் செய்தார்.

    உடல்நலக்குறைவால் அவரிடம் இருந்த நிதியமைச்சர் பதவி பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. அவர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, பி. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் தொடர்ந்து ஐந்து முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×