என் மலர்
இந்தியா
'பழிக்கு பழி': அப்பாவை தோற்கடித்தவரை அடுத்த தேர்தலில் வீழ்த்திய மகன்
- உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை வென்றுள்ளது.
- பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியா கூட்டணி 234 இடங்களும் பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.
பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை பெற்றுள்ளதால் ஜூன் 8 ஆம் தேதி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்நிலையில், 25 வயது 3 மாதங்கள் ஆன சமாஜ்வாதி வேட்பாளர் புஷ்பேந்திர சரோஜ், உ.பி.யின் கவுஷாம்பி தொகுதியில் பாஜக வேட்பாளரான வினோத் குமார் சோங்கரை சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் புஷ்பேந்திர சரோஜின் தந்தையான முன்னாள் அமைச்சர் இந்த்ரஜித் சரோஜ், 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் வினோத் குமார் சோங்கரிடம் 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தார்.
கடந்த தேர்தலில் அப்பாவை தோற்கடித்த பாஜக வேட்பாளரை இந்த தேர்தலில் மகன் வீழ்த்தி பழி தீர்த்துள்ளார்.