search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசிடம் கஞ்சா புகைக்க தீப்பெட்டி கேட்ட மாணவர்கள்
    X

    போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசிடம் கஞ்சா புகைக்க தீப்பெட்டி கேட்ட மாணவர்கள்

    • திரிச்சூரில் இருந்து பள்ளி மாணவர்களை மூணாறுக்கு பள்ளி நிர்வாகம் சுற்றுலா அழைத்து வந்துள்ளது.
    • மாணவர்களிடம் இருந்து 5 கிராம் கஞ்சா பறிமுதல்.

    கேரளாவில் கஞ்சா புகைக்க தீப்பெட்டி கேட்க போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்நிலையத்திற்கு வந்த மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திரிச்சூரில் இருந்து பள்ளி மாணவர்களை மூணாறுக்கு பள்ளி நிர்வாகம் சுற்றுலா அழைத்து வந்துள்ளது. மூணாறுக்கு முன்பாக உணவு ப்ரேக்கிற்காக பள்ளி பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது 4 மாணவர்கள் தீப்பெட்டி தேடி அழைத்துள்ளனர்.

    அப்போது பக்கத்தில் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு காவல் நிலையத்திற்கு வெளியே பழைய கார், பைக் நிறுத்தப்பட்டிருந்ததை மாணவர்கள் பார்த்துள்ளனர். 'கலால்துறை அலுவலகம்' என்ற பெயர்ப் பலகையை பார்க்காமல் இந்த இடத்தை ஒர்க் ஷாப் என நினைத்து வந்த மாணவர்கள் உள்ளே சென்று மப்டியில் இருந்த ஒரு போலீசாரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர்.

    அப்போது உள்ளே சீருடையில் போலீஸ் இருப்பதை பார்த்து 2 மாணவர்கள் பயந்து ஓடியுள்ளனர். மற்ற 2 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது ஒரு மாணவரிடம் இருந்து 5 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து பள்ளி ஆசியர்களை அழைத்து விசாரித்து, பள்ளி வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர் . அப்போது 1 கிராம் அளவுள்ள 'ஹாசிஸ் ஆயில்' என்ற போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர்.

    பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×