என் மலர்
இந்தியா
'சன்னி லியோன்' பெயருக்கு பாஜக அரசுத் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000.. பலே மோசடி
- படிவத்துக்கு ஒப்புதல் அளித்த திட்டப் பயனாளிகள் சரிபார்ப்பு அதிகாரிகளும் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
- சன்னி லியோனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமணமான பெண்களுக்கான சத்தீஸ்கர் பாஜக அரசு மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல முன்னாள் ஆபாசப் பட நடிகை சன்னி லியோன் பெயரில் ஒருவர் கணக்கு தொடங்கி அதில் இந்த திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 பெற்று வந்துள்ளார்.
சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் உள்ள தலூர் கிராமத்தில் இந்த மோசடி நடந்துள்ளது. வீரேந்திர ஜோஷி என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த மோசடி குறித்த செய்திகள் மூலமே அதிகாரிகள் கவனத்துக்கு இது வந்துள்ளது. வீரேந்திர ஜோஷி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது படிவத்துக்கு ஒப்புதல் அளித்த திட்டப் பயனாளிகள் சரிபார்ப்பு அதிகாரிகளும் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வங்கிக் கணக்கை முடக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் ஹரீஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மோசடி குறித்து ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் சாடியுள்ளது. மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் பணம் பெரும் 50 சதவீத பயனாளிகள் போலியானவர்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் முந்தைய ஆட்சிக் காலத்தில் காங்கிரஸால் வழங்க முடியாத மாதாந்திர உதவிகளை இப்போது அம்மாநிலப் பெண்கள் பெறுவதால் காங்கிரஸ் வேதனையில் இருப்பதாக துணை முதல்வர் அருண் சாவோ தெரித்துள்ளார். சன்னி லியோனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.