search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே நம்பர் பிளேட் கொண்ட 2 கார்கள் தாஜ் ஓட்டலில் நுழைந்ததால் பெரும் பரபரப்பு
    X

    ஒரே நம்பர் பிளேட் கொண்ட 2 கார்கள் தாஜ் ஓட்டலில் நுழைந்ததால் பெரும் பரபரப்பு

    • அவரது நம்பர் பிளேட் கொண்ட காரை தாஜ் ஓட்டலில் சாகிர் அலி பார்த்துள்ளார்.
    • அந்த காரை நிறுத்த சாகிர் அலி முயன்றுள்ளார்.

    தாஜ் ஓட்டலில் ஒரே நம்பர் பிளேட் கொண்ட 2 கார்கள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தாஜ் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர் 2 கார்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் இந்த நம்பர் பிளேட் சாகிர் அலி என்பவருக்கு சொந்தமானது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    சாகிர் அலிக்கு அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு வந்துள்ளது. அவர் செல்லாத இடத்தில கூட போக்குவரத்து விதிகளை மீறியதாக அவருக்கு மெசேஜ் வரவே அவர் போலீசிடம் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் அவரது நம்பர் பிளேட் கொண்ட காரை தாஜ் ஓட்டலில் சாகிர் அலி பார்த்துள்ளார். அந்த காரை நிறுத்த சாகிர் அலி முயன்றுள்ளார். பின்னர் போலீசார் 2 கார்களையும் நிறுத்தியுள்ளனர்.

    சாகிர் அலியின் காரின் பதிவு எண் MH01EE2388 என்றும் மற்றொரு காரின் பதிவு எண் MH01EE2383 ஆகும். காருக்காக வாங்கிய கடனை அடைக்க இஎம்ஐ கட்ட முடியாததால் தனது கார் எண்ணின் கடைசி இலக்கத்தை '8' ஆக மாற்றியதாக மற்றொரு காரின் ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து கார் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பை தாஜ் ஓட்டலில் மிகப்பெரிய தாக்குதல்களை அடுத்தடுத்து நிகழ்த்தியதை யாரும் மறக்க மாட்டார்கள்.

    அரபிக்கடலில் படகு மூலம் வந்த 10 பேர் கொண்ட பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல், தெற்கு மும்பையில் புகுந்து பல இடங்களில் தாக்குதல் தொடுத்தது. அந்த சமயத்தில் தாஜ் ஓட்டலில் 6 குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் எண்ணற்றோர் உயிரிழந்தனர்.

    Next Story
    ×