என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
'பேசுறது தேசபக்தி செய்யுறது பிரிவினைவாதம்.. எம்எல்ஏக்களை ஆடு மாதிரி விலைபேசும் மோடி' - கார்கே தாக்கு
- லவ் ஜிஹாத், லேண்ட் ஜிகாத் மூலம் நம் மீது தாக்குதல் நடக்கிறது, முஸ்லிம்களுக்கு மட்டுமே ஜார்கண்ட் கிடையாது என்று யோகி ஆதித்யநாத் பேசினார்.
- எம்எல்ஏக்களை ஆட்டுமந்தையாக வைத்திருந்து, ஆகாரம் கொடுத்து, கடைசியில் அவர்க்ளுக்கு மோடி விருந்தாக்குவார்.
81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. எனவே அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஜார்கண்ட் மாநிலம் தால்தோன்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜார்கண்ட் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் கிடையாது, லவ் ஜிஹாத், லேண்ட் ஜிகாத் மூலம் நம் மீது தாக்குதல் நடக்கிறது, நாம் ஒன்றுபட்டால்தான் பாதுகாப்பு, பிரிந்திருந்தால் வெட்டப்படுவோம் [batenge to katenge] என்று பேசினார்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஜார்கண்டில் தனது பிரசாரத்தின்போது பேசுகையில், உண்மையான யோகி பதேங்கே தோ கதேங்கே என்றல்லாம் பேச மாட்டார்கள். அவர் ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய் என்று யோகி ஆதித்யநாத்தை விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய கார்கே, மோடி ஜி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்து வருகிறார். எம்.எல்.ஏக்களை ஆடுகளைப் போல் காசு கொடுத்து வாங்கி வரும், அவர்களை ஆட்டுமந்தையாகவே நடத்தி, அவர்க்ளுக்கு ஆகாரம் அளித்து கடைசியில் அவர்களை மோடி விருந்தாக்குவார் என்று விமர்சித்தார்.
மேலும் அம்பானி, அதானி ஆகிய இருவருக்காகவே மட்டுமே மோடி - அமித் ஷா ஆட்சி நடத்துகின்றனர். இவர்கள் நால்வர் மட்டுமே நாட்டை ஆட்டிப்படைகின்றனர். வாயால் மட்டும் தேசபக்தியை பேசும் பாஜக நாட்டை பிளவுபடுத்தும் வேலையை செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்