search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழகத்தை சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
    X

    தமிழகத்தை சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

    • 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • புதுச்சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது.

    2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, இந்தாண்டில் பத்ம ஸ்ரீ விருது பெறும் 12 விருதாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு இசை கலைஞர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, 50 ஆண்டுக்கும் மேலாக அனுபவம் கொண்ட புதுச்சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

    மேலும், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி செட்டிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×